மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (நவ.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் செல்போனை திருடி விட்டார் என்பதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து அவர், மனுதாரருக்கு 19 வயதாகும் நிலையில், அவர் மீது கைது செய்யப்பட்ட அன்றே 4 வழக்குகள் பொய்யாக பதியப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில், மனுதாரர் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலவையில் உள்ளதாகவும், சமுதாயத்திற்கு தொந்தரவாக மனுதாரர் செயல்பட்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி காவல் துறை மற்றும் நீதித்துறைக்கு சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இதன்படி பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு இளைஞன் அல்லது சிறார் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்த உடனே தொடர்ச்சியாக அவர் குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறார். இதனால் ஒரு கூட்டத்தின் தலைவனாக அவர் மாறுகிறார்.
இது குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை. மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை. இந்த உத்தரவை தமிழக சிறைத் துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறைத் துறையின் துணை காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!
மேலும், மனுதாரர் செப்டம்பர் 29ஆம் தேதியில் இருந்து சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபதனை ஜாமீன் வழங்கப்படுகிறது. இதன்படி, அவர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.