ஆளுநருக்கு தபால்காரர் வேலைதான்… அதிகாரம் செய்வதல்ல… கி.வீரமணி பரபரப்பு பேச்சு..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
20 April 2022, 1:38 pm

கரூர் : கையெழுத்து போடத்தெரியாத பார்ப்பனரை பார்க்க முடியுமா..? என்று நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை பயணத்தில் திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் நீட், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் முதல் சென்னை வரை செல்லும் இந்த பரப்புரை பயணம் பல்வேறு மாவட்டங்கள் சென்று விட்டு நேற்று இரவு 9 மணியளவில் கரூர் நகர காவல் நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கீ.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம் என்பதை ஏன் எதிர்கிறோம் என்பதை முழுவதுமாக விளக்கமாக போட்டுள்ளோம். திராவிட மாடல் என்பதற்கு அடிப்படை சமூக நீதி கட்சி தான். எதை கொடுத்தாலும் கீழ் ஜாதியினருக்கு கொடுக்க கூடாது என்ற நிலை இருந்தது. 102 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தந்தை பெரியார் குறுகுலத்தில் படித்தவன், நீதிகட்சியின் ஆட்சி என்றார்.

தமிழ் உலகளாவிய மொழி.சமஸ்கிருதம் தேவ பாஷை. அது செத்து போன மொழி. அப்போது யாரும் சமஸ்கிருதம் படிக்க முடியாது. சமஸ்கிருதம் என்றால் நன்றாக செய்யப்பட்டது என பொருள். 100 ஆண்டுக்குப் பிறகு மோடி புதுப்பிக்கிறார். அதன் அடிப்படை தான் நீட் தேர்வு. உலகளவில் ஆராய்ச்சி செய்து கொடுத்த பெயர் தான் திராவிடன் மாடல். இந்திய மொழிகளிலும், வெளி நாட்டு மொழிகளிலும் பெரியாரின் வார்த்தைகள் மொழி பெயர்க்கிறோம்.

நீட் தேர்வு நாம் வேண்டாம் என்கின்ற நேரத்தில் புதிய கல்வி கொள்கை கொண்டு வருகிறார்கள். அது குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருக்கிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது இந்த கல்விக் கொள்கையில் தான் படித்தார். அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கில் தற்போது செயல்படுகிறது அரசு. தொடக்க கல்வி முதல் பல்கலைக் கழக படிக்கும் வரை இட ஒதுக்கீடு கிடையாது என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஊக்கத் தொகை வழங்கிறது தமிழக அரசு.

புதிய கல்விக் கொள்கையில் 3 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு வைக்கிறார்கள். ஆனால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். படிக்க கூடாது என்பதற்காக ஒரு கல்விக் கொள்கை அது புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் தோல்வி அடைந்தால் தாய், தந்தைக்கு உதவி செய்யுங்கள் என்கிறது என்கிறது.

சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். அவருக்கு அந்த வேலை கிடையாது. அவருக்கு வேலை தபால் காரர் வேலை. அரசியல் சட்டத்தின் படி 2வது முறையாக அவருக்கு சட்டப்படி தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் செய்ய மறுக்கிறார். அவர் தானா செய்ய மாட்டார். டெல்லியில் இருந்த சொல்வதை செய்கிறார்.

மோடி ஆட்சியில் தான் நாள் ஒன்றுக்கு 1000 கோடி சம்பாத்தித்தார்கள் என்றால் அம்பானி, அதானி மட்டுமே. விழிப்புணர்வு உருவாக்க வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி நாங்கள் கேட்கிறோம். மாநில அரசு சிறப்பாக செயல்பட முட்டுக் கட்டை போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1219

    0

    0