பிளாக் பஸ்டர் ஹிட்.? காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் இத்தனை கோடிகளா.?

Author: Rajesh
4 May 2022, 10:26 am

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்;கொண்டிருக்கும் திரைப்படம் ”காத்து வாக்குல ரெண்டு காதல்” கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது சொந்த தாயரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.

முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

3வது நாளே படத்தின் வெற்றியை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா 3 பேரும் பிரபல தேவி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் மிகவும் ஹைலைட்டாக சமந்தாவின் கதிஜா வேடம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடபபடுகிறது. படம் முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ. 35 மேலாக வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1406

    6

    1