மயானமான கபடி மைதானம்… களத்தில் கபடி வீரருக்கு நிகழ்ந்த சோகம் : அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 9:21 pm

வெண்ணிலா கபடி குழு படத்தைப் போல கபடி விளையாட்டு போட்டியின் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்நதவர் கபடி வீரர் விமல் (26). பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் நேற்று இரவு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த முரட்டு காளை அணியை சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் விமல் அணியினர் கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடினர். கபடி வீரர் விமல் விளையாடும் பொழுது, அதனை நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில், அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே மயங்கி விழும் காட்சி பதிவாகியுள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!