உலக அளவில் 2-ஆம் இடம் பெற்ற கடைசி விவசாயி : கமலின் விக்ரம் படத்துக்கு எந்த இடம் தெரியுமா?
Author: Rajesh5 July 2022, 1:30 pm
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்த கடைசி விவசாயி படத்துக்கு உலக அளவில் 2வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் திரைப்படங்கள் குறித்து லெட்டர்பாக்ஸ்டி என்ற நிறுவனம் மதிப்பிட்டிவருகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான படங்களை இந்த நிறுவனம் தரவரிசைப்படுத்தியது.
அதில், மணிகண்டன் தயாரித்து இயக்கி, விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருந்த கடைசி விவசாயி திரைப்படத்துக்கு 2ஆம் கிடைத்துள்ளது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 6வது இடத்திலும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 11வது இடத்திலும் உள்ளது.
ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு இந்திய திரைப்படங்கள் உலக அளவில் கவனம் பெற்றுவருகின்றன. அந்த வகையில் குறைவான பொருட்செலவில் உருவான கடைசி விவசாயி படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் விவசாயிகளின் நிலையை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தது.