கடவுளே… அஜித்தே : முதலமைச்சர் ஸ்டாலினை திரும்பி பார்க்க வைத்த கூட்டம்.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 7:06 pm

சமூக வலைதளத்தில் எந்த கணக்கையும் வைத்துக்கொள்ளாதவர் தல அஜித். ஆனால் அஜித் பற்றி பேசும் வீடியோக்கள் , போட்டோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடக்கின்றது.

வலிமை படத்தின் அப்டேட்டை பட குழுவினரோடு கேட்பதனை கடந்து, பொதுவெளியில் பொதுமக்கள் சங்கமிக்கும் இடங்கள், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் மைதானங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டனர்.

அது இணையத்தை ஆட்கொண்டது. அந்த வகையில் கடவுளே அஜித்தே என்ற அஜித் ரசிகர்கள் முழங்குவது வைரலாகின்றன. கூட்டங்கள், பொது இடங்கள், வெளிநாட்டின் பல்வேறு இடங்களில் கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் முழங்குகின்றனர்.

இதையும் படியுங்க: நேற்று 4… இன்று 6 : சொந்தக் காசில் சூனியம் வைத்த நடிகை கஸ்தூரி!

இந்த நிலையில், இன்று முதல்வர் கலந்துகொண்ட கலைஞர் நூலகம், அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் வழக்கம் போல அஜித் ரசிகர்கள் வைப் ஆனார்கள். கடவுளே அஜித்தே என்று கேப் கிடைக்கும் இடங்களில் முழங்கினர்.

அஜித் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம், அமர்களம் முதல்வரின் கூட்டத்திலும் தொடர்ந்தது. கூட்டத்தில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித்தே என்று ஆர்பரிப்பது வாடிக்கையாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 356

    0

    0