காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா..?

Author: Rajesh
19 April 2022, 5:25 pm

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் .

அதன் பின்னர் நடிகை காஜல் அகர்வால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரியில் அறிவித்து இருந்தார். வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் காஜல் தானது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்நிலையில் தற்போது காஜலுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காஜல் – கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் படி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Shankar about Indian 3 Shooting முடிஞ்சுபோச்சு.. ’இந்தியன் 3’ நாள் குறித்த ஷங்கர்.. கதறும் ரசிகர்கள்!