செவாலியே விருதுக்கு தேர்வான காலச்சுவடு எஸ்.ஆர் சுந்தரம் : முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 6:46 pm

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்கள், பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ளார்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள், செவாலியே விருது பெறவுள்ள பதிப்பாசிரியர், கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி