தைரியமா இருங்க, நான் இருக்கன்ல : நரிக்குறவர் குடியிருப்பில் ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி ஆட்சியர் மக்களுக்கு ஆறுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 3:42 pm

உளுந்தூர்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குடியிருப்பு வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடு கட்டித் தர வேண்டும் என குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக ஆட்சியர் உறுதி அளித்தார். அப்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?