மணலூர்பேட்டை அருகே உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் இரும்பு ராடு கொண்டு தலையில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் நரசார் என்பவருக்கும், ஜீவகன் என்பவருக்கும் முன்னோர்களின் சொத்து பிரச்சனைகள் சம்பந்தமாக அடிக்கடி முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக அந்த ஊர் பொதுமக்கள் சார்பாகவும், முக்கியஸ்தர்கள் சார்பாகவும், முடிவு செய்து கடந்த சனிக்கிழமை அன்று சர்வேயர் மற்றும் காவல் துறையினர் மூலமும் இடம் அளப்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஜீவகன் தரப்பில் முன்கூட்டியே அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக யாருடைய அனுமதியில்லாமல் பள்ளம் தோண்டியதாகவும், அந்த தோன்றிய பள்ளத்தை தடுத்து நிறுத்துவதற்காக நரசார் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி அவரது மகன் விஜய பிரதாபன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளனர்.
அதனை மீறி பள்ளம் தோண்டி முள்வேலி அமைப்பதற்காக வேலையில் ஈடுபட்ட காரணத்தினால், அவர்கள் மூன்று பேரும் ஜீவகன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி உள்ளனர். இதில், ஆத்திரமடைந்த ஜீவகன் மகன் குமார் என்பவர் சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில், வீட்டிற்குள் இரும்பு ராடு கையில் ஏந்தியபடி ஓடி வந்து ஆக்ரோஷமாக விஜய் பிரதாபன் தலை மீது ஓங்கி இரண்டு முறை அடித்துள்ளார்.
இதில் வலியால் துடித்து ரத்தம் சொட்ட விஜய பிரதாபன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, இன்னொரு மகனான சுரேஷ் என்பவரும் ஜெயந்தி மற்றும் அவரது கணவரான நரசார் என்பவரையும் கட்டையால் படும் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் கதறி அழுது கொண்டு வலியால் துடிதுடித்துள்ளனர்.
உடனிருந்த உறவினர்களும் பயந்து கொண்டு சத்தம் போட்டு அலரி உள்ளனர்,இதனை அடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேர்களையும் உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரும்பு ராடால் அடி வாங்கிய விஜய பிரதாப்பனுக்கு தலையில் 7தையல் மருத்துவர்கள் போட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வைரல் ஆகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.