கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு : கோவையில் பாமக சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 4:06 pm

கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவிக்கு கோவையில் பாமக சார்பில் கண்ணிர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டம் நடத்தி அப்பகுதியே போர்களமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் பள்ளியை சூறையாடினர்.

அந்த மாணவியின் மரணம் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, தற்போது பள்ளியில் முகாமிட்டு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அம்மாணவிக்கு கோவை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீமதிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “ஸ்ரீமதி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மாணவியின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகாத நிலையில், கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?