பச்சிளம் குழந்தையின் உயிரில் விளையாடும் அரசு மருத்துவமனை… இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டுக் கொடுத்த அவலம்!!
Author: Babu Lakshmanan15 February 2024, 2:48 pm
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறும் இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டுக் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவலம் அரங்கேறி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதற்காக முதல் சிகிச்சையான இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வரும் பச்சிளம் குழந்தை ஒன்று இன்குபேட்டரில் கல் வைத்து முட்டு கொடுத்து சிகிச்சை பெற்று வருவதை பார்ப்பவரை அதிர்ச்சி உள்ளாகியுள்ளது. மேலும், குழந்தைகளின் தீவிர சிகிச்சையான இன்குபேட்டர் சிகிச்சையிலேயே, இதுபோல அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பச்சிளம் குழந்தையின் உயிரோடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விளையாடுகிறதா என கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல, அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்தாலும் கூட, அங்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள் கழிவறை வசதிகள் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத ஒரு அவல நிலையும் நீடித்து வருவதோடு, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது மருத்துவ கல்லூரி நிர்வாக திட்டமோ, பொதுமக்கள் சார்பிலும் அல்ல சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பெரும் எழுந்துள்ளது.
இதுபோல, சம்பவங்கள் எல்லாம் அரங்கேறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.