இன்னும் ஓயாமல் ஒலிக்கும் மரண ஓலம்!விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

Author:
22 June 2024, 10:36 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே இறந்தவர்களின் உடல் உறவினர்களால் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் கருணாபுரம் பகுதி முழுவதும் மரண ஓலத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நாமக்கல் சேலம் புதுச்சேரி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கலாச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர் இது குறித்து சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் ஒருபுறம் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்க மறுபுறம் சிபிசிஐடியினர் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்னும் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் கொடுக்கும் தகவலின் பெயரில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மேலும் கருணாபுரம் பகுதியில் உள்ள அனைவரது வீட்டிலுமே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை 141 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஏழு பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். குறிப்பாக 20 பேர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்