கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து வதந்தி… இரு மாணவர் அமைப்பு நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது.. நீதிபதி போட்ட கண்டிசன்..!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 4:32 pm

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சார்ந்த சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் இன்று காலை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அம்பிகா அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். காலை மாலை இருவேளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?