கள்ளக்குறிச்சி கலவரம் ; பள்ளி மற்றும் போலீஸ் வாகனத்திற்கு தீவைத்ததாக 4 பேர் கைது!!
Author: Babu Lakshmanan16 August 2022, 8:54 pm
கள்ளக்குறிச்சி : கணியாமூர் கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தியதாக வும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 4 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தியதாக சின்னசேலம் அருகே உள்ள கா.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிவர்மா கைது செய்யப்பட்டார்.
இதேபோல, போலீஸ் தடுப்புகளை மீறி சென்று போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரும், பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதாக ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், சு.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய நான்கு பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.