கள்ளக்குறிச்சி வன்முறை… தனியார் பள்ளியில் முகாமிட்ட அமைச்சர்கள் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் விபரம் சேகரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 3:36 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி சூறையாடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதை பார்வையிடுவதற்காக தமிழக அமைச்சர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் தற்போது பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…