கமல், கேப்டன் மகனுக்கு கிரீன் சிக்னல்? வானதிக்கு வானவெடி தான்.. முடிவு கொடுத்த சந்திப்பு!

Author: Hariharasudhan
12 February 2025, 1:55 pm

கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்க திமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்துள்ளதே இன்றைய அமைச்சருடனான சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

சென்னை: “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதிமுக உடனான கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது” எனக் கூறியுள்ளார், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த ரேஸில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனும் உள்ளனர். முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் நிச்சயமாக எம்பி ஆவார் என்றும், சுதீஷை மாநிலங்களவை எம்பி ஆக்கவும் கட்சி முடிவு செய்தது. ஆனால், நிலைமை சற்று தலைகீழானது.

இந்த நிலையில் தான், மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட் பற்றிய பேச்சு எழத் தொடங்கி உள்ளது. ஏனென்றால், வருகிற ஜூலை 24ஆம் தேதியுடன் ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் எம்பியாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

Kamal Haasan

அதேபோல், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. மேலும், மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: காதலர் தினத்தைக் கொண்டாட தயாரா? 10 படங்கள் ரிலீஸ்.. முழு லிஸ்ட் இதோ!

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்துள்ளார். எனவே, கமலுக்கு எம்பி சீட் உறுதியாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசனை வீழ்த்தி, பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த முறை கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டால், கோவையில் அவர் நிற்கமாட்டார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், அந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து கமல்ஹாசன் களமிறக்கப்பட்டால், போட்டி கடுமையாகும் எனவும் கூறப்படுகிறது.

  • தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!