தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு.. திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கமல்ஹாசன் வீடியோவில் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 8:10 pm

தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு.. திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கமல்ஹாசன் வீடியோவில் விளக்கம்!!

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில், எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது” என்று கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி