தொடக்கம் முதலே அந்த விஷயத்தில் கறார்.. கணக்கு போட்டு கறந்த கமல்.?

Author: Rajesh
6 May 2022, 2:26 pm

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல்’ நிறுவனமே தயாரித்திருக்கிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. தொடக்க முதலே இயக்குனரிடம் கறாராக இருந்திருக்கிறார் கமல். அதற்கு காரணம், சினிமாவின் ஆணிவேரையும் ஆய்ந்தவர் கமல் என திரைத்துறையில் இருப்பவர்கள் கூறுவார்கள். ஏனென்றால், நடிப்பிலும், படத்தை விற்பதிலும் கைதேர்ந்தவர; இந்த நிலையில் விக்ரம் படத்தின் விற்பனை, விநியோகம் மற்றும் வசூலைக் கணக்கு வைத்து, இந்த தொகைக்குள் படம் எடுத்தால் நிச்சயம் லாபத்தை எட்டிவிடலாம் என்பது கமலின் கணக்காம். அதற்கேற்ப படத்தை எடுத்த கமல், எதிர்பார்த்தது போலவே லாபத்திற்கு விற்பனை செய்துள்ளாராம்.

விக்ரம் படத்தின் ரிலீஸ் உரிமையை ஸ்டார் குழுமம், அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியிருக்கிறதாம். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 125 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறதாம். இதன் மூலம் தயாரிப்பு செலவுக்கு மேல் ஓடிடி விற்பனையிலேயே கிடைத்துவிட்டதால், தியேட்டர் வசூல் மூலம் கிடைக்கும் பணம் லாப கணக்கில் மட்டும் சேருமாம். இதனால், ஒட்டுமொத்த விக்ரம் படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!