புது சிக்கலில் சிக்கிய கமல்.. விக்ரம் படம் அப்போது வெளிவருமா..?

Author: Rajesh
20 May 2022, 11:06 am

கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையில் பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே, டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவதைத் தடுக்கக் கோரி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளின்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு நடைபெறுவதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசும், காவல் துறையும் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கமலின் விக்ரம் படத்தைப் பொறுத்தவரை ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்த நாட்கள் வார இறுதி நாட்களாக இருப்பதால் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பு அதிகம். இந்நிலையில் தற்போது நடந்துவரும் இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பு வழங்கப்போகிறது எனத் தெரியவில்லை. ஒருவேளை தடை உத்தரவு வரும் பட்சத்தில் விக்ரம் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் இருக்க வாய்ப்பில்லாமல் போகும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 951

    2

    2