விக்ரம் படத்தால் குஷியான கமல். அப்போ, அரசியலுக்கு குட்பையா.? அவரே சொன்ன பதில்.!

Author: Rajesh
14 June 2022, 12:38 pm

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் களமிறங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக அவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். பின்னர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு சினிமாவில் பிசியாகி வரும் கமல், அரசியலுக்கு முழுக்கு போட உள்ளதாகவும் தகவல் பரவி வந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை, சினிமாவில் இருந்தாலும் தலைவர் தான். நாங்கள் அரசியலில் எங்கள் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறோம்.

எங்களது அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம், நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலை தேர்ந்தெடுத்தேன்” எனக்கூறி அரசியலை விட்டு விலகப்போவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!