நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு வெளியாக வேண்டிய இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்பு தனது சிஷ்யனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய உயரத்தில் இருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படும் அனைவருமே இப்படத்தில் இருந்தனர். இந்த நிலையில், விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை மீட்டு எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பல இடங்களில் வசூல் மழை கொட்டி வருகிறது.
அதன் காரணமாக இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என உறுதி கொண்டுள்ளாராம் கமல்ஹாசன். ஒரு காலத்தில் கமல் படம் என்றாலே அதில் கட்டாயம் காதல் காட்சி மிக அருமையாக இருக்கும். காதல் பாடல்கள் கதாநாயகியுடன் ரொமான்ஸ் காட்சிகள், கண்டிப்பாக ஒரு முத்த காட்சி என்று இளமை ததும்பும் விதமாக இருக்கும்.
சமீபத்திய படங்களான விஸ்வரூபம் படத்திலும், பாபநாசம் படத்தில் கூட ரொமான்ஸ் காட்சி நன்றாக இருக்கும். உத்தம வில்லன் படத்தில் ஆண்ட்ரியாவுடன் உதட்டு முத்தக்காட்சி, விஸ்வரூபம் படத்தில் படுக்கையறை காட்சி என்று இளைஞர்களை குதூகலப்படுத்தும் காட்சிகள் கண்டிப்பாக ஏதேனும் ஒன்று கமல் திரைப்படத்தில் இடம்பெறும்.
ஆனால், இவை எதுவுமே இல்லாமல், ஏன் கதாநாயகி கூட இல்லாமல் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்தது, இளம் இயக்குனருடன் கைகோர்த்தது தான் இந்த மிகப்பெரிய வெற்றி கிடைத்ததற்கு காரணம் என கமல்ஹாசன் நம்புகிறாராம்.
அதன் காரணமாக இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என உறுதி கொண்டுள்ளாராம் கமல்ஹாசன். இனி காதல் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்துள்ளாராம்.
இந்த செய்தியை கேட்ட கமல் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகிதான் உள்ளனர். ஏன் என்றால் கமல் படம் என்றாலே இளமை ததும்பும் காட்சிகள் இருக்கும். ஆனால் இனி அவற்றை பார்க்க முடியாதே என்று வருத்தத்தில் இருக்கின்றனராம். இருந்தாலும் விக்ரம் திரைப்படம் போல நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்தால் போதுமென்ற மனநிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.