‘சனியன்’ என பிரபல நடிகையை கடிந்து கொண்ட கமல் : படப்பிடிப்பை நிறுத்த இவங்க செய்த காரியத்த பாருங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 2:27 pm

தமிழ் சினிமாவில் வேற லெவலுக்கு கொண்டு சென்ற நடிகர்களின் கமல்ஹாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் நடித்த படங்கள் எல்லாமே வித்தியாசம், ஒவ்வொரு படங்களில் மெனக்கெட்டு நடிப்பவர்.

அப்படித்தான் ராதிகாவுடன் அவர் நடித்த படத்தின் போது, ராதிகாவுக்கு LOW BP ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கமல்ஹாசன், இன்னைக்கு படப்பிடிப்பை நிறுத்தணும், டிமிக்கி கொடுக்கணும் அதனால நீ மயங்கி விழுந்துரு என ராதிகாவிடம் கமல் வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் இதற்கு நோ சொன்ன ராதிகா, படப்பிடிப்பில் பிஸியாக நடித்தார். ஆனால் 2 நாட்கள் கழித்து மீண்டும் அந்த படத்தின் காட்சியின் போது ராதிகா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் கண் திறந்து பார்த்த போது, கமல்ஹாசன் அவர் முன் நின்று சனியன், உன்னை எப்போ விழுக சொன்னா இப்ப விழுகற என செல்லமாய் கண்டித்துள்ளார். இந்த தகவலை ராதிகா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்