காமராஜர், கேப்டன் போல சூர்யா… நல்லாட்சிக்காக காத்திருப்போம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 1:22 pm

நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விச்செலவை ஏற்று உதவி செய்து வருகிறார்.

மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வு, மதுவுக்கு எதிராக தனது கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்.

அரசியல் முன்னெடுப்பின்றி பொதுநலச்சேவையாக அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யாவை அவரது ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர்கள் மூலம் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரது படங்களோடு நடிகர் சூர்யா படத்தை இணைத்து நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம் என ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!