‘2026ல் தமிழகத்தின் தேடலே.. நாளைய முதல்வரே’.. காமராஜர் பிறந்த நாளையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் வைரல்…!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 11:35 am

‘2026ல் தமிழகத்தின் தேடலே, நாளைய தலைமுறையை வழிநடத்த போகும் நாளைய முதல்வரே’ என நடிகர் விஜயை குறிப்பிட்டு அதிர வைக்கும் அரசியல் வசனங்களுடன் நெல்லையில் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழாவிற்காக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் விழாவில், காமராஜரை பற்றியும், அம்பேத்கரை பற்றியும், பெரியாரை பற்றியும் படியுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அரசியல் வசனங்கள் இடபெற்றிருந்தது. தற்போது, காமராஜர் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதனையொட்டி, நெல்லை மாநகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிர வைக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

அதில் கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே என குறிப்பிட்டு சட்டமன்ற முகப்பு படத்துடன் ஒரு போஸ்டரும், 1954ல் தமிழகம் கண்டெடுத்த தங்கம் அய்யா காமராசர்,2026 இல் தமிழகத்தின் தேடல் என விஜயை குறிப்பிட்டு மற்றொரு போஸ்டரும் பிரம்மாண்டமான முறையில் நெல்லை வண்ணாரப்பேட்டை, முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மாநகரில் நாளைய முதல்வர் என நடிகர் விஜயை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 446

    0

    0