விஸ்வரூபம் எடுக்கும் கனகசபை விவகாரம்… சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது அறநிலையத்துறை செயலர் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 8:02 pm

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கனகசபை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் பலகை வைத்தனர். இதனால், முதலில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அகற்ற அறநிலையத்துறை செயலர் உட்பட அதிகாரிகள் வந்தனர். ஆனால் பலகையை அகற்றவிடாமல், தீட்சிதர்கள் தடுத்தனர். இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சரும் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை செயலர் சரண்யா துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பலகையை அகற்ற சென்றபோது, தடுத்ததாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் கூறியதாவது, மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் வரும்போது தான் பிரச்னை வருகிறது. அரசைப் பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம், அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்பது தான் கொள்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், எவையெல்லாம் தேவையற்றவையோ அவற்றையெல்லாம் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என கூறியிருந்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 370

    0

    0