சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த பிரபல ரவுடி தினேஷ்…

Author: kavin kumar
7 February 2022, 6:29 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தினேஷ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரத்தில் கடந்த பல வருடங்களாக கொலை, அடிதடி ,கட்டப்பஞ்சாயத்து ,ஆள் கடத்தல் சாராயம் விற்பனை போன்ற பல குற்ற செயல்களை செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல தாதா என பெயரெடுத்த ஸ்ரீதர் கடந்த சில வருடம் முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாதா ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர் காஞ்சி நகரை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தாதா ஸ்ரீதரிடம் கார் டிரைவராக பணியாற்றிய தினேஷ் என்பவருக்கும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது.

இதன் காரணமாக 2 தரப்பிலும் 20க்கும் மேற்பட்ட கொலை ,ஆள் கடத்தல் ,அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வெடி குண்டு வீச்சுகள், துப்பாக்கி முனையில் மிரட்டல் போன்ற பலவிதமான செயல்களில் தினேஷ் ஈடுபட்டு ஸ்ரீதருக்கு பின்னர் தான் தான் காஞ்சிபுரம் தாதா என பெயர் எடுத்து வந்தான். தினேஷுக்கு பின்புலமாக பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு, வெடிகுண்டு நிபுணன் சேக்காதர் , பிரபல ரவுடி படப்பை குணா உள்ளிட்ட பலர் பக்கபலமாக இருந்தனர்.

காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளுடன் தினேஷ் கைகோர்த்துக் கொண்டு பல குற்றச் செயல்கள் செய்து காவல்துறையினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்தான். தினேஷ் சை காவல்துறையினர் பிடிக்கும் போதெல்லாம் காவல்துறையில் உள்ள பலருக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து விட்டு தன் மீது எந்தவிதமான அடியும், ஸ்ட்ராங்கான வழக்குகளும் பதிவு பண்ணாத வாறு நடந்து கொண்டான்.

கடந்த வருடம் தினேஷ் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் கோவா மாநிலத்தில் வைத்து காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். ஸ்ட்ராங்கான வழக்குகள் பதிவு செய்யாததால் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை உடைத்து கொண்டு வெளியே வந்த தினேஷ் தியாகு ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்துகொண்டு தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டிருந்தது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

அதேபோல் பிரபல ரவுடி படப்பை குணாவும் காவல் துறையினருக்கு மிகப் பெரும் தலைவலியாக இருந்து வந்தான். இவர்களின் கொட்டத்தை அடக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அயல் பணி பெற்று காஞ்சிபுரத்திற்க்கு வந்தார். அதனால் கதிகலங்கிப் போன பல ரவுடிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் தலைமறைவாகி விட்டனர். ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் ரவுடிகளை வேட்டையாடி வந்தனர்.

மேலும் தினேஷ், தியாகு ,படப்பை குணா போன்ற ரவுடிகளை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டது அவர்களுக்கு தெரியவந்ததால், பல ரவுடிகள் வெளிமாநிலத்திலும், சில ரவுடிகள் வெளிநாட்டுக்கும் தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தனர். இதில் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி தியாகுவை டில்லியிலிருந்து பின் தொடர்ந்து சென்று துப்பாக்கிமுனையில் கைது செய்து காஞ்சிபுரம் கொண்டுவந்து சிறையில் அடைத்து குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல ஏ ப்ளஸ் நிலை ரவுடி படப்பை குணாவும் காவல்துறையினரின் கைகளில் சிக்கினால் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சரணடைந்தார். இதையெல்லாம் கவனித்து வந்த தினேஷ், காவல்துறையினரின் கைகளில் சிக்க கூடாது என்ற எண்ணத்தில் இத்தனை நாளாக பதுங்கி இருந்து யாருக்கும் தெரியாமல் இன்று சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஒன்பதில் மாஜிஸ்ட்ரேட் மோகனாம்பாள் முன்னிலையில் சரணடைந்தான்.

இதைப்பற்றி காவல்துறையினர் கூறுகையில், “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை கண்டு தலைமறைவாக உள்ளனர். இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள வெள்ளத்துரை அவர்களிடம் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளனர். சில நாட்களில் போலீஸ் கஸ்டடியில் இவர்களை எடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளது என தெரிவித்தனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 1364

    0

    0