‘தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்தனும்’… இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து ; பாஜக பிரமுகர் கைது..!!
Author: Babu Lakshmanan12 June 2023, 7:18 pm
வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வங்கதேசத்தில் உள்ள மசூதியில் பணம் எண்ணுவது போன்ற காட்சியை தமிழகத்தில் உள்ள மசூதியில் நடைபெற்றது போன்று, சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பாஜக-வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வம் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், முபாரக் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல் துறையினர் வங்கதேசத்தில் நடைபெற்றதை தமிழகத்தில் நடைபெற்றாற்போல் பதிவிட்டு அவதூறு பரப்பிய பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் செல்வத்தை நேற்று நள்ளிரவு வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தற்போது புழல் சிறையில் அடைத்தனர்.
பாஜக மாவட்ட செயலாளர் கைது சம்பவம் காஞ்சியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.