ஒரே ஆழ்துளை கிணறுக்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகிய பலவித வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வளர்ச்சிப் பணி களுக்கும், ஆளும் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலர்களே, 15 சதவீத ‘கமிஷன்’ வாங்கிக் கொண்டு, பணிகளை ஒதுக்கீடு செய்து வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
மேலும் படிக்க: ‘வேண்டும் என்றே செஞ்ச மாதிரி இருக்கு’… சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து ; சந்தேகத்தை கிளப்பும் அதிமுக!!
ஒரே பணிக்கு, இரு விதமான திட்ட நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல லட்சங்களை வாரி சுருட்டி உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, வாலாஜாபாத் அடுத்து அடுத்துள்ள வில்லிவலம் ஊராட்சி குடிநீர் திட்டத்திற்கு, 3 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். அதே ஆழ்துளை கிணற்றின் மற்றொரு பகுதியில், நாயக்கன்பேட்டை ஊராட்சி திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, 5.80 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக, திட்ட பலகை எழுதி உள்ளனர்.
ஒரே ஆழ்துளை கிணற்றில், ஒருபுறம் நாயக்கன்பேட்டை ஊராட்சிக்கும், மற்றொருபுறம் வில்லிவலம் ஊராட்சிக்கும், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளதாக திட்ட பலகை வைத்து, ஒரே திட்டத்திற்கு இருவித மான நிதியை ஒதுக்கீடு செய்து, பணத்தை கையாடல் செய்து உள்ளதாக புகார்கள் எழந்துள்ளன.
இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ‘கையூட்டு வாங்கி கொண்டு, பணிகளை கண்காணிக்காமல் கையெழுத்திட்டு பணத்தை விடுவித்து இருப்பது, வேதனையாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஒரே ஆழ்துளைக்கிணற்றில் ஒருபுறம் நாயக்கன் பேட்டை ஊராட்சிக்கும், மற்றொரு புறம் வில்லிவலம் ஊராட்சி குடிநீர் பணிக்கும் என ஒரே திட்டத்திற்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு என எழுதப்பட்டுள்ளது கண்டு அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.