ஆசைவார்த்தை கூறி 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…14 வயதில் சிறுமி கர்ப்பம் ; பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது!!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 10:26 am

காஞ்சிபுரம் அருகே 9 ம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த கேசவன். இவருடைய மகன் லோகநாதன்(21). இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.

இவர் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு உடற் பயிற்சிக்காக சென்று வந்துள்ளார். அப்போது அந்த உடற் பயிற்சி கூடத்துக்கு அருகே வீட்டில் உள்ள 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமி ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கத்தை பயன்படுத்தி அந்த சிறுமியுடன் தகாத உறவு கொண்டு வந்துள்ளார். திடீரென்று அந்த சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் தாயார் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் லோகநாதனை கைது செய்தனர்.

மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள் தினந்தோறும் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்குள்ள சிறுமிகள் இளம்பெண்கள் ஆகியோர்களை அழைத்து பெண்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தவறான ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகள் எல்லாம் வழங்குவார்கள். சமீப காலமாக அது போன்ற எந்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை என பல இடங்களில் பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

மீண்டும் பெண்களுக்கு இதுபோன்ற கவுன்சிலிங் தொடர்ந்து கொடுத்தால், இது போன்ற பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 515

    0

    0