உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் டீக்கடையில் பேப்பர் கப்புகளை வாங்கி பயன்படுத்தும் அவலம் அரங்கேறி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவதியற்ற மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாணவனை அழைத்துக் கொண்டு அவர் தந்தை தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுக் குழல் வழியாக மருந்தினை செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்திருக்கிறார்கள்.
மாணவனின் மூச்சு குழல் வழியாக மருந்தை செலுத்துவதற்குண்டான மருத்துவ உபகரண கருவி இல்லாத காரணத்தினால், அருகிலுள்ள டீ கடையில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை வாங்கி வந்து, அதன் உதவியுடன் அந்த மருந்தினை மாணவனின் மூக்கு வழியாக செலுத்தும் காட்சி அங்கு உள்ளவர்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது.
அரசு மருத்துவமனைக்கு சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் அதிக அளவில் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் அங்கே முறையான சிகிச்சை அளிப்பதற்கு கூட ஒரு சிறிய அளவிலான மருத்துவ உபகரணம் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.
அந்த பள்ளி மாணவனுக்கு ஆக்சிஜன் செலுத்த மாஸ்க் இல்லாத காரணத்தினால் டீக்கடையில் இருந்து டீ குடிக்கும் கப்புகளை வாங்கி வந்து அதை வைத்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் ஆபத்தான விஷயம். இந்த நிலையை அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து செய்கின்றது. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.