இந்திரா காந்தி சிலையை அகற்ற முயன்ற அதிகாரிகள் ; காங்கிரஸாரின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக பணி நிறுத்தம்

Author: Babu Lakshmanan
26 November 2022, 11:47 am

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1988ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலையானது, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை பலமுறை காங்கிரஸ் கட்சியினரிடம் கூறியும், இந்திரா காந்தி சிலையை அகற்றப்படாததால், தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை இணைந்து நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டனர்.

இப்பணியானது காலை சுமார் ஆறு முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 9 மணி வரை நடைபெற்றதால், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இதனால் வானங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆமை போல் நகர்ந்து செல்கிறது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சுங்குவார்சத்திரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது .

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம், ‘இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள், நாங்களே இந்திரா காந்தி சிலையை அகற்றி விடுகிறோம்,’ என்ற கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்திரா காந்தி சிலையை அகற்றுவதை இரண்டு நாட்கள் தள்ளி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!