ஆன்மீக நகரில் தரமற்ற உணவுகள் விநியோகம்… வேடிக்கை பார்க்கும் உணவு பாதுகாப்பு துறை : வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 January 2023, 1:09 pm

காஞ்சிபுரம் நகரில் பல உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதால், குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான காஞ்சிபுரம் நகருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும், பட்டு சேலை வாங்கும் வியாபாரிகளும் என ஏராளமானோர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒரிசா மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

அதேபோல், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காடு கோட்டை, சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றார்கள்.

வருகின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப உணவகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உணவகங்களில் பணிபுரிய அனுபவம் மிக்க வேலையாட்கள் கிடைக்காததால் உணவகங்களில் உணவு தயாரிப்பதில் பலர் மிகுந்த கவனத்தை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து பரவலாக உள்ளது. சேவை மனப்பான்மையுடன் கூடிய உணவு அளிக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்திசாலையில் பிரபல உணவகமான‌ சரவண லஞ்ச் ஹோம் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பொங்கல் ஆர்டர் செய்தார். பொங்கலுடன் சாம்பார், சட்னி பரிமாறப்பட்டது. வாடிக்கையாளர் உணவை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது சாம்பாரில் அட்டைப் பூச்சி ஒட்டிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.

இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதேபோல் பேருந்து நிலையம் அருகே சென்னை பிலால் ஓட்டல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் செயல் பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை வர வைப்பதற்காக ஒரு கிலோ சிக்கன் பிரியாணி 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு உணவு அருந்துகின்றனர்.

இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட்ட கொண்டிருந்த காவலர் ஒருவரின் தட்டில் நீல வாக்கில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி உற்றார். அதேபோல், பக்கத்து டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரின் உணவில் நைலான் ரப்பர் ஒன்றும், இன்னொருவர் தட்டில் ஸ்டேப்ளர் பின்னும் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். குழந்தையின் வயிற்றில் நைலான் ரப்ப ஸ்டாப்லர் பின் சென்று இருந்தால் என்னவாகி இருக்கும் என ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் இட்டனர்.

இதைப் பற்றி ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது சமையலுக்கு புது ஆட்கள் நியமித்ததால் இப்படி வந்துவிட்டது, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டியுள்ளார்.

இதைப் பற்றி தனி பிரிவு காவலர் கூறும்போது :- பலவிதமான உணவகங்களில் அதிகமான தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் சுற்றுலாப் பயணிகள் சாப்பிடுவதால் தரமான உணவை அளிக்க வேண்டும். ஆனால் பல உணவகங்களிலும் கையேந்தி பவன்களிலும் தரமற்ற உணவு பொருட்கள், தரமற்ற எண்ணெய், தரம் அற்ற மசாலா வகைகள், கரப்பான் பூச்சி ,அட்டை பூச்சி ,புழுக்கள் போன்றவை காணப்படுகின்றது. இதற்கு உணவு பாதுகாப்பு துறையினரின் மெத்தனம் தான் காரணம் என வேதனையுடன் கூறினார்.

பொதுமக்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களை தரத்துடன் அளிக்க வேண்டிய உணவகங்கள் இதுபோன்று கவனக்குறைவுடன் செயல்படுவது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பலியான செய்தி கேரளாவையே உலுக்கி விட்டது. உணவகங்களில் சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது கட்டிங் வாங்குவதால் இது போன்ற தரமற்ற நிலையை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளார்கள் என மக்கள் புலம்புகின்றார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 464

    0

    0