நில அளவையாளர் வீட்டில் திடீர் ரெய்டு… அடுக்கடுக்காக வந்த புகார்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 12:00 pm
Quick Share

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் உள்ள நில அளவையாளர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவர் காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். தற்போது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் படிக்க: இது முதலமைச்சருக்கு அழகா…? தமிழர்கள் மீது பழி சுமத்த போடும் நாடகம்… CM ஸ்டாலின் மீது பாஜக குற்றச்சாட்டு..!!

இந்நிலையில், பாஸ்கர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி பகுதிகளில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.30 மணியிலிருந்து ஆற்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் வீடு மற்றும் அவரின் மைத்துனர் மாண்பரசு வீடு ஆகிய 2 இடங்களில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் தற்போது பணியில் உள்ள ஊட்டியில் அவர் தங்கி உள்ள வீட்டிலும் அப்பகுதியை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 172

0

0