அழுது கொண்டே சொன்ன 9 வயது சிறுமி… பக்கத்து வீட்டு இளைஞரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் ; பகீர் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
4 May 2023, 11:26 am

காஞ்சிபுரம்; நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 23 வயது உடைய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மேவலூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் மரம் சார்ந்த அழகு வேலைப்பாடு செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகன் ராஜேஷ் (வயது 23). 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். ராஜேஷ் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று தனியாக இருக்கும் அக்கம்பக்கத்து வீட்டின் மாடியில் உள்ள பெண்களை கேலி கிண்டல் செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த, லாவண்யா என்பவரின் மகள் சுருதி (வயது 9) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

லாவண்யாவின் பக்கத்து வீட்டில் ராஜேஷ் வசிப்பதால் லாவண்யாவின் மகள் சுருதியை அழைத்து ஆசை வார்த்தைகளை காண்பித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதைப்பற்றி யாரிடமாவது கூறினால் அனைவரையும் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் கண்டறிந்த லாவண்யா சுருதியிடம் விசாரணை செய்ததில், பக்கத்து வீட்டு ராஜேஷ் தன்னுடைய பிறப்புறுப்பில் என்னவோ செய்வார் என அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, லாவண்யா ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேஷை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார்.

9 வயது சிறுமியை பாலியல் ‘பலாத்காரம்’ செய்த குற்றத்திற்காக ராஜேஷ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?