உயர்ரக பைக்கில் பட்டாக்கத்தியுடன் இரவில் ரோந்து வரும் கொள்ளையர்கள்.. அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 10:58 am

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே உயர் ரக பைக்கில் பட்டாக்கத்தியுடன் இரண்டு இளைஞர்கள் வந்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிய குடியிருப்பு பகுதிகளான ஜினகாஞ்சி நகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அருள்குமார் என்பவர் மின்சாரத்துறை போர்மேனாக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி கல்பனா அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜின காஞ்சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று குலதெய்வம் வழிபாட்டுக்காக சொந்த ஊரான ஆரணிக்கு சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பு தெரு விளக்கு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவை நிறுத்தி இருப்பதும் முன் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்க்கையில், சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.

அதேபோல், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரியப்பன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணமும் பறிபோனது தெரியவந்தது.

இதனையடுத்து இரு வீட்டாரும் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் பட்டா கத்தியுடன் ஒரே பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கைவரிசை செய்தது கண்டறியப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சி மூலம் விலை உயர்ந்த R15 பைக்கில் வந்து இரண்டு இளைஞர்கள் கையில் பட்டாக்கத்தி மற்றும் கடப்பாறையை கொண்டு வீடு புகுந்து கொள்ளை அடித்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu