திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்- மாலதி தம்பதியினரின் மகள் கலைச்செல்வி (பெயர் மாற்றம்). இவர் பிஇ பட்டதாரி. அந்தியூர் அடுத்த சமத்துவபுரம், அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன் – சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன், டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்,
பிரபாகரனும், கலைச்செல்வியும் உறவினர்கள். பிரபாகரன் தனது பாட்டி வீட்டிற்கு செல்லும்போது கலைச்செல்வியோடு பழக்கம் ஏற்பட்டு, கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக கலைச்செல்வியுடன் பேசுவதை குறைத்து கொண்ட பிரபாகரன், கலைச்செல்வியை திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, பொங்கல் விடுமுறைக்கு ஊர் திரும்பிய பிரபாகரனிடம் கலைச்செல்வி நேரில் சென்று திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். அப்போது, பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவிக்கவே, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கலைச்செல்விபுகார் கொடுத்தார்.
இருவரையும் அழைத்து பேசிய காவல்துறையினர், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன் கலைச்செல்வி திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது. மீண்டும் இன்று கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டிற்கு வந்த கலைச்செல்வி, அவர்களின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினர் சிவரஞ்சனி வருவதற்கு முன்பே வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர். (கவுன்சிலிங் சென்றதாக கூறப்படுகிறது). தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீசார் கலைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.