தினமும் குடித்துவிட்டு டார்ச்சர் செய்த கணவன்… 3 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

Author: Babu Lakshmanan
26 May 2023, 6:59 pm

காஞ்சிபுரம் ; குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாத மனைவி தன்னுடைய மூன்று வயது மகளுடன் நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்தவர் துளசி. இவர் இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சசிகலா என்பவருடன் திருமணம் நடைபெற்று மூன்று வயதில் தஷ்விகா என்ற ஒரு பெண் குழந்தையும், மெய் எழிலன் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

மது போதைக்கு அடிமையான துளசி அவ்வப்போதும் மது அருந்திவிட்டு வந்து தன்னுடைய மனைவி சசிகலாவுடன் சண்டை இடுவார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பாத்ரூமில் உள்ள வாலி கதவுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதால் சசிகலா கோபத்துடன் துளசியிடம் சண்டை இட்டார். அப்போது சசிகலாவுக்கும் துளசிக்கும் வாக்குவாதம் கடுமையாக ஏற்பட்டது.

துளசி எப்போதும் போல் நேற்று காலை இருங்காடு கோட்டையில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவியும் தன்னுடைய மூன்று வயது பெண் குழந்தையும் இல்லாததைக் கண்டு அக்கம்பக்கம் தேடி வந்தார்.

அதே ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள குட்டையில் சசிகலாவும் குழந்தை தஷ்விகாவும் நீரில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்று துளசி அவர்கள் இருவரையும் மீட்டு சவிதா மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து போனதை உறுதி செய்தனர்.

சம்பவத்தை கேள்விப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

குடிகார கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் திருமணமான நான்கே வருடத்தில் 38 வயதுடைய மனைவி சசிகலாவும், மூன்று வயது உடைய பெண் குழந்தை தஸ்விகாவும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Jailer 2 Movie Update கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!