தவறான சிகிச்சையால் இளைஞருக்கு கால் அகற்றம்..? பிரபல தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

Author: kavin kumar
6 February 2022, 4:32 pm
Quick Share

திருப்பூர் : காங்கேயம் அருகே தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இளைஞருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவரது கால் நீக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் வயது (21) இவருக்கு கடந்த 24ம் தேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் காயமடைந்த அஜித்குமார் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் (சூர்யா மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ஒரு வாரம் கடந்த நிலையில் காலில் மிகவும் வலி எடுத்துள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது கால் அழுகிய நிலையில் உள்ளதாகவும்,

காலை எடுத்தால் மட்டுமே மேலும் பரவுவதை தடுக்க முடியும் என கூறியதையடுத்து கால் அகற்றப்பட்டது. இதை அறிந்த அவரது உறவினர்கள் இன்று காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள சூர்யா மருத்துவமனை முன்பாக திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர். இதில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். காங்கேயத்தில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனை முற்றுகை இட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1383

    0

    0