Categories: தமிழகம்

தவறான சிகிச்சையால் இளைஞருக்கு கால் அகற்றம்..? பிரபல தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

திருப்பூர் : காங்கேயம் அருகே தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் இளைஞருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவரது கால் நீக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் வயது (21) இவருக்கு கடந்த 24ம் தேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் காயமடைந்த அஜித்குமார் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் (சூர்யா மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ஒரு வாரம் கடந்த நிலையில் காலில் மிகவும் வலி எடுத்துள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது கால் அழுகிய நிலையில் உள்ளதாகவும்,

காலை எடுத்தால் மட்டுமே மேலும் பரவுவதை தடுக்க முடியும் என கூறியதையடுத்து கால் அகற்றப்பட்டது. இதை அறிந்த அவரது உறவினர்கள் இன்று காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள சூர்யா மருத்துவமனை முன்பாக திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் காவல்துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர். இதில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். காங்கேயத்தில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மருத்துவமனை முற்றுகை இட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

AddThis Website Tools
KavinKumar

Recent Posts

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

51 minutes ago
பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

1 hour ago
வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

2 hours ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

16 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

17 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

18 hours ago