திமுக அமைச்சரின் தொகுதியில் 2வது முறையாக தேர்தல் புறக்கணிப்பு : பொதுமக்கள் வைத்த பேனரால் பரபரப்பு…

Author: kavin kumar
5 February 2022, 5:31 pm

திருப்பூர் : காங்கேயம் நகராட்சி 5வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-திருப்பூர் சாலையில் நகராட்சி 5 வது வார்டு பகுதியில் திரு நீலகண்டன் வீதி, சாயப்பட்டறை வீதி, புது விநாயகர் கோவில் வீதி ஆகியவை உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சாக்கடை வசதி மற்றும் முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், நகராட்சி ஆணையாளர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனுகொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். இதனால் கடும் அதிர்ப்த்திஅடைந்த 5 வது வார்டு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் வைத்துள்ளர். பேனரால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே போல் 12 வார்டு பகுதியான அய்யாசாமி நகர் காலனியில் இதே போல் நகராட்சியை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு என போர்டும் வாய்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொகுதியில் இருமுறை தேர்தல் புறக்கணிப்பு என போர்டு வைத்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?