கர்ப்பிணியை மீட்ட கனிமொழி… பிறந்த பெண் குழந்தை : பெற்றோர் வைத்த பெயர் : நெகிழ்ச்சியில் கனிமொழி!!
கர்ப்பிணியை மீட்ட கனிமொழி… பிறந்த பெண் குழந்தை : பெற்றோர் வைத்த பெயர் : நெகிழ்ச்சியில் கனிமொழி!!
இன்று (24/12/2024) தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியில், கடந்த (21/12/2023) கனிமொழி உதவி எண்ணின் மூலம் அழைப்பு விடுத்தது.
பெண் குழந்தை பெற்ற தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களின் இல்லத்தில் சந்தித்தார். குழந்தையை தான் கையால் வாங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி, பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப கனிமொழி என்று பெயர் சூட்டினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கடந்த (21/12/2023) மதியம் 3 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியிலிருந்து கர்ப்பிணிப் பெண் அபிஷாவை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரசவ தேதியும் நெருங்கியது என்றும் அவரது குடும்ப உறுப்பினரிடம் இருந்து அழைப்பு வந்தது.
வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு, கனிமொழி கருணாநிதி அவர்களின் வாகனத்தை கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு அனுப்பினார்.
மூன்றாம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்ட பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு (21/12/2023) 9மணி அளவில் அபிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணிக்குப் பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துமனைக்கு செல்ல முடிந்தது.
பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும், அவருக்கு மிக்க நன்றி என்று அபிஷா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.