குமரி அதிமுக பிரமுகருக்கு வந்த குறுஞ்செய்தி.. பார்த்ததும் ஷாக்… கேரளா போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்..

Author: Babu Lakshmanan
19 July 2023, 9:50 pm

கேரளா மாநில போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் குமரி அதிமுக பிரமுகர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயசந்திரன். அதிமுக பிரமுகரான இவரது செல்போனுக்கு நேற்று கேரளா மாநிலம் பத்தணம்திட்டா போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், கடந்த மாதம் 24ம் தேதி காலை திருவல்லா சாலை வென்னிகுளம் பகுதியில் தங்களது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் பயணித்ததாகவும், பின்னால் இருந்தவரும் ஹெல்மட் அணியாததால் தலா ரூ.500 வீதம் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குறுஞ்செய்தியில் இருந்த வாகன பதிவெண்ணை பார்த்த போது, அது பல்சர் வாகனம் என்பதும், பதிவெண் TN-75, A-7099 என்பது தெரியவந்தது

தனது இருசக்கர வாகனம் ஹோண்டா யூனிகன். அதுவும் பதிவெண் TN-75,AF-7099 என்பதும், அபராதம் விதிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் நுண்ணறிவு கேமராவில் பதிவான பதிவெண் தெளிவாக இருந்த பின்னரும், மற்றொரு வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளதாகவும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, முறையான பதில் இல்லை என வேதனை தெரிவித்ததோடு, குமரி மாவட்டத்தில் உள்ள பல வாகன உரிமையாளர்களுக்கு இதுபோல் கேரளா போக்குவரத்து துறையால் தவறாக அபராதம் விதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் கூறினார்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 353

    0

    0