அந்த விஷயத்தில் பிரதமருக்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி ; பொன்.ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
9 April 2024, 6:16 pm

மோடியின் தமிழ் பற்றுக்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி என்று குமரி மாவட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நந்தினி ஆகியோர் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சுற்று வட்டார பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக களியக்காவிளை மாடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: இல்லாத ஊழலை இருப்பதாக சொல்வதா? உங்க குட்டு வெளியே வந்துவிட்டது : பாஜகவை சாடிய மாஜி முதலமைச்சர்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணனிடம், பிரதமர் மோடி நிரந்தரமாக தமிழகத்தில் தங்கினாலும் ஒரு தொகுதி கூட பாஜக வெற்றிபெறாது என உதயநிதி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்திலிருந்து திமுக இவர்கள் 39 சீட்டுகளையும் வெல்வார்களா..? மோடியின் தமிழ் பற்றிற்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி தமிழ் தெரியாத குஜராத் மாநிலத்தை சேர்ந்த மோடி தமிழ் மீது உள்ள பற்றால் தமிழர்களுக்காக உழைக்கிறார். இவர்களோ தமிழை அழிக்காமல் இருந்தால் போதும் என்றார்.

மேலும் படிக்க: ‘போடா வெளியே’… ஆபாச வார்த்தைகளால் திட்டி விவசாயி மீது தாக்குதல்… சந்தையை விட்டு விரட்டி அடித்த அதிகாரி…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் போல, ஒரே கொடி என மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆக்குவார்கள் என்ற கமல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்ததாவது :- கமலுக்கு என்ன அரசியல் தெரியும். சொந்த தொண்டர்களை கூட கையில் வைத்திருக்க பக்குவம் இல்லாத தலைவர். ஏன் அவர் போட்டியிடவில்லை. குமரி பாராளுமன்ற உறுப்பினரால் தொகுதிக்கு மட்டுமல்ல, நாட்டிற்கு ஆபத்து. குமரியில் பாஸ்போர்ட் ஆபீஸ் அலுவலகம் இருப்பது கூட தெரியவில்லை.

வாரிசு அரசியல் என்பது ஸ்டாலின். அவர் கட்சி வளர்க்க பாடுபட்டார். ஆனால் அதன் அடுத்த தலைமுறை வருவதை மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள். இண்டியா கூட்டணி பாழடைந்த கோட்டை. பாஜக கூட்டணி மாளிகை, என்றும் தெரிவித்தார்.

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெளியிலிருந்து வந்து போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இருநது ஒருவரை போட்டியிட வைக்க அருகதை அற்ற கட்சி, என பேட்டியின் போது தெரிவித்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!