தொழுகை நடத்துவதில் தகராறு… போலீசார் கண்முன்பே கொடூரமாக தாக்கி கொண்ட இஸ்லாமியர்கள்… பெண்களும் குடுமிப்பிடி சண்டை!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 12:46 pm

கன்னியாகுமரியில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் கண்முன்பே ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர்.

கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள மீராசா ஆண்டவர் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது ரமலான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இரு தரப்பினிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

மேலும் படிக்க: கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

இதை அடுத்து இரு தரப்பினரையும் அழைத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!

இருப்பினும், இரு தரப்பினிடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும், கையாளும் கொடூரமாக போலீசார் கண் முன்பே தாக்கி கொண்டனர். ஆண்கள் ஒருபுறம் தாக்கிக் கொள்ள அதற்கு இணையாக பெண்களும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டனர்.

மேலும் படிக்க: நீங்க சிட்டிங் எம்பி என்பது மறந்து போச்சா..? திமுக எம்பி கனிமொழிக்கு நடிகை விந்தியா சரமாரி கேள்வி..!

மேலும், கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கும் ஒரு தரப்பினர் முற்பட்டனர். இதை அடுத்து அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…