குளத்தில் மீன்பிடித்த மீனவருக்கு அதிர்ச்சி… வலையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 3:56 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வேம்பனூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில் மீன் பிடி தொழிலாளர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மீன் வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 20 நோட்டுக்கட்டுகள் இருந்தன. அந்த நோட்டுகட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்று குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் போல் உள்ளது. மேலும் புதிய ரூபாய் நோட்டு கட்டுகளில் உள்ளது போல் வங்கிகளின் நூல் கட்டும் போடப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமான மக்கள் பார்வையிட வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஆசாரிப்பள்ளம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சினிமா சூட்டிங் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. சினிமா சூட்டிங் முடிந்த பிறகு பணக்கட்டை வீசி எறிந்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!