‘வேலைக்கு போ-னு சொன்னது ஒரு குத்தமா..?’… தந்தையை கத்தியால் குத்திய மகன் ; ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan7 July 2023, 6:05 pm
கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து. இவர் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் என்பவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன் கணேஷை, தந்தை பாலமுத்து குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் கணேஷ் தந்தை பாலமுத்துவை கத்தியால் தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் தப்பி ஓடிய கணேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.