பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு… மாணவியிடம் சில்மிஷம் ; வெளியான வீடியோ… பாதிரியாரின் மற்றொரு முகம்.. காம லீலைகள் அம்பலம்..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 12:08 pm

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பெண்களை காமவலையில் வீழ்த்தி, ஆபாசமாக நடந்து கொண்ட ச வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த இவருக்கும், காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜியோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு, பாதிரியாருக்கு எதிராக பல்வேறு தடயங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தார்.

பின்னர் இது தொடர்பாக மினி அஜிதா கூறுகையில், பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனடிக்ட் ஆன்டோ, அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், அதை தட்டிக் கேட்டதால் எழுந்த பிரச்சினையில் தனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பொய் புகார் அளித்து, போலீசார் மூலம் கைது செய்ததாக கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட பாதிரியார் பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகவும், பல நேரங்களில் ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பாதிரியார் மீது குற்றச்சாட்டினார். இது தொடர்பாக உரிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை காவல்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

தற்போது குமரி மாவட்டத்தில் பாதிரியாரின் லீலை காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ