உலகத்துல எங்கயாவது இப்படி நடக்குமா..? குமரிய மட்டமா நினைச்சுட்டாங்க.. ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 6:45 pm

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் காங்கிரேட் சாலை பணி முடிந்த நிலையில், நடைபாதையில் கற்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் குறித்து வாலிபர் ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் உள்ள பிரதான சாலை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில், தற்போது ஜங்சன் பகுதியில் உள்ள சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.

காங்கிரேட் சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையோரம் உள்ள நடைபாதையை மட்டப்படுத்தாமல் சாலை பணி செய்த ஒப்பந்ததாரர் கற்களை கொட்டி நிரப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ‘கன்னியாகுமரியின் அதிசயத்தை பாருங்கள். உலகத்தில் எங்கேயாவது ரோட்டு பகுதியில் நடக்குமா..? கன்னியாகுமரி மாவட்டத்தை ரொம்ப மட்டமாக நெனச்சிட்டாங்க,’ என ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ