சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன்… இறுதி நேரத்தில் நடந்த டுவிஸ்ட் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை…!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 7:19 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன் செய்த செயலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடந்த 21ம் தேதி ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்த திருட்டு குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று குளச்சல் வெள்ளியாக்குளம் திரிசூல இசக்கியம்மன் கோவிலில் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த திருடன், கோவிலில் இருந்த திரிசூலத்தை எடுத்து உண்டியலை உடைத்துள்ளார். அப்போது, உண்டியலில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த திருடன் சோகத்துடன் அங்கிருந்து மீண்டும் சுவர் ஏறி குதித்து நடையை கட்டியுள்ளார்.

https://player.vimeo.com/video/880154232?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குளச்சல் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!